மலர் சூழ்ந்த சோலையின் வசம்
மனம் திளைப்பதுபோல், மலர் மருந்து இடர் தீர்த்து ஈசனின் பாதத்தில் கிடைக்கும் அமைதியினை அளிக்கவல்லது.
மனம் சார் உளவியலில் அறுத்து எடுக்கப்படும் அத்தனையும், சமன் செய்யும் ஆற்றல் இவற்றிடையே பொதிந்து காணப்படுகின்றது.
அறமும், அறத்தினால் நிலவும் இன்பத்தையும், ஏற்கும் தன்னிகரற்ற ஆற்றல் மனதிலேயே சூழ்ந்து இருந்தாலும், அந்த மனம் வழி பயணிக்கும் உணர்வு மாறாட்டத்தை நல்வழிப்படுத்தும் கடிவாளமாக இந்த மருந்து செயல்படுகின்றது.
இந்தப் பயணத்தில் விருச்சிகம் இந்த ராசி காலபுருஷனுக்கு எட்டு என்பதனால் மறை ஞானமும், இறை சித்தமும் இயற்கையிலேயே உண்டு.
இங்கு ஆட்சிக் கோளாக செவ்வாயும், நீசம் அடையும் கோளாக சந்திரனும், ஆறாம் பாவக அதிபதியாக செவ்வாயாகவும், எட்டாம் பாவகத்திற்கு புதனும் பொறுப்பேற்று பல இடர்மிகுந்த மனோநிலையையும், சூழலையும் அமைக்கும் தன்மை உருவாகி உள்ளது.
இங்கு கேது உச்சம் ஆவதனால் இவர்கள் பின் பாயிண்ட் என்கின்ற வார்த்தையை அதிகமாக உபயோகிப்பவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசியில் விசாகம், அனுஷம், கேட்டை என்கின்ற நட்சத்திரங்களின் அமர்வும் இதை உறுதிப்படுத்துகின்றது.
இதற்கு இம்பேஷன்ஸ் (IMPATIENTS))+ ஸ்டார் ஆஃப் பெத்தலகம் (STAR OF BETHLEHEM) + எல்ம் (ELM)+ ஜென்டின் (GENTAIN) போன்ற மருந்தை எடுப்பது சிறப்பு.
இந்த ராசியின் காலமானது நிகழ் காலமாக இருப்பதனால் செஸ்நெட் பட் (CHESTNUT BUT) சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.
நோய் மறை ஞானம், மரணத்திற்கு ஒப்பான கண்டம், கர்ம நோய், போன்றவற்றின் தொடர்பு அமையப்பெறும் சூழ்நிலை இருப்பதனால், அக்ரிமோனி (AGRIMONY)+ஆஸ்பெண் (ASPEN) ராக் வாட்டர் (ROCK WATER) போன்ற கூட்டு மருந்தை எடுத்துக்கொள்வது சிறப்பினைத் தரும்.
மலர் மருந்தில் 16-ஆவது மருந்தாக ஹானி சக்ககிள் (HORNBEM) அமைந்துள்ளது.
இவர்கள் கடந்த காலத்திலேயே வாழ்வது, நடந்ததை எண்ணி வருத்தப்பட்டு கொண்டேயிருப்பது, தவறவிட்ட வாய்ப்புகளை நினைத்து கவலை கொள்வது, தான் இப்படி செய்திருக்கக்கூடாது அல்லது கொஞ்சம் முயற்சி செய்திருக்கலாம். குழந்தையை இப்படி அடித்திருக்கக்கூடாது என்கின்ற எண்ணங்களின் கூட்டு கலவையாக இருப்பார்கள். மேலும் எதை செய்தாலும் காலம் கடத்தி செய்தல் இவர்களுக்கு பிரியமான ஒன்றாகும்.
இந்த மனநிலையில் பயணிப்பவர்களை மிகச் சிறப்பாக கையாளும் மருந்தாக இம்மருந்து அமைந்துள்ளது. 17-ஆவது மருந்தாக ஹார்ன் பீம் (HORNBEM) அமைந்துள்ளது.
எழுந்தவுடனேயே இன்றைய நாளை எப்படி ஆரம்பிக்கப் போகின்றோமோ என்கின்ற கேள்வி யுடனும், தற்காலிகமான திகைப்பு மற்றும் பதட்டத்துடனும், மிகவும் பலவீனமாக தோற்றத்தை கொண்டிருப்பதும், அன்றாட வேலைகளுக்குகூட தயங்கும் தன்மையும், அதிகமாக கத்தி கூச்சலிடும் சுபாவமும், அமைய பெற்றிருக்கும் நபர்களுக்கு இம்மருந்து சிறப்பான விடிவை நிச்சயமாக அளிக்கும்.
இதன்மூலம் உற்சாகமாக செயல்பட வைக்கும். காரிய சித்தி தரும். மனதில் உண்டாகும் தடையை உடைக்கும். 18-ஆவது மருந்தாக இம்பேஷன் (IMPATIENCE) அமைந்துள்ளது.
பொறுமையை இழந்தும் ஆத்திரம், அவசரம், போட்டி மனப்பான்மையுடனும், ஒரு வேலையை எடுத்தேன் கவிழ்த்தேன் என்கின்ற செய்கின்ற குணமும், அதிகமான விபத்துக்குள்ளாகும் தன்மையும், தாங்கமுடியாத அதிக வலியால் உயிரை மாய்த்துக் கொள்ளும் சூழலும், மரணத்தில்கூட அவசரப்படும் குணமும், பிறரை விரட்டி வேலை வாங்கும் குணத்துடனும், மற்றவர்களின் வேலையில் குறுக்கிட்டு நானே பார்த்துக்கொள்கின்றேன் என்கின்ற தன்மையும், நிறைந்தவர்களுக்கு இம்மருந்து தரமான ஒரு சூழ சூழலை அமைத்துத் தரும்.
இதனால் சுறுசுறுப்பாக வேலை செய்யவும், முக்கியமான பொறுப்புகளை வகிக்கும் தன்மையும், பொறுமையுடனும் மன அமைதியுடனும் செயல்படும் தன்மையை மாற்றி அமைக்கும் அதீத திறன் இதில் அமையப் பெற்றுள்ளது.
செல்: 80563 79988